நளினி: நாட்டிலேயே நீண்டகாலம் சிறையில் இருக்கும் பெண் நான்

வேலூர்: இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை உடனே விடுதலை செய் யும்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முதல்வர் பழனி சாமியிடம் வலியுறுத்தி உள்ளார். 
இது தொடர்பாக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ராஜீவ் கொலை வழக்கில் தண் டனை பெற்றுள்ள 7 பேரை விடு தலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார்.
“விடுதலை தொடர்பான உத்த ரவை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கிக் காத்திருக்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது,” என்று நளினி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தன்னை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் வேண்டு கோள் விடுத்துள்ளார். முன்னதாக தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

இதற்கிடையே 7 தமிழர் விடுதலை தொடர்பில் தமிழகத் தின் நியாயக் குரல் ஆளுநர் காதில் விழுகிறதா? என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 
ராஜீவ் கொலை வழக்கில் எந்தக் குற்றமும் இழைக்காமல் தண்டிக்கப்பட்டுள்ள 7 பேரையும் 28 ஆண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகும் விடுதலை செய்யத் தயங் குவதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
7 தமிழரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தாமதப்படுத்துவ தற்கான காரணம் என்ன என்ப தைத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ராமதாஸ், தெரிவித்துள்ளார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம்

23 Aug 2019

சிவனுக்கு அப்துல் கலாம் விருது

கீரைக்கட்டுகளைப் போல் எலிகளை ஆறு  ஆறு எலிகளாகக் கட்டி ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.  படம்: ஊடகம்

23 Aug 2019

கும்பகோணத்தில் எலிக்கறி விற்பனை அமோகம்