கார் கிடங்கில் திடீர் தீ விபத்து: இருநூறு கார்கள் தீக்கிரை

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கார் தொழிற்சாலைக்கு சொந்த மான கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து தீக்கிரை யானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மிகப் பெரிய திறந்த வெளியுடன் கூடிய கிடங்கு என்பதாலும், தீ வேகமாகப் பரவியதாலும், பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே அதை ஓரளவுக்கு கட்டுக் குள் கொண்டுவர முடிந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித் துள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியில் பிரபல தனியார் கார் நிறுவனத் துக்குச் சொந்தமான மிகப்பெரிய காலி மனையும், அதில் கிடங்கு ஒன்றும் உள்ளன. இந்நிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட கார்கள் கிடங்கிலும், அதையொட்டி உள்ள திறந்தவெளியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.
நேற்று காலை திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் மற்ற கார்களுக்கும் தீ பரவியதை அடுத்து கரும்புகை எழும்பியது.
அவ்வழியே சாலையில் சென்ற பலர் இக்காட்சியைக் கண்டு அதிர்ந்து காவல்துறைக்கும் தீய ணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கடு மையாகப் போராடியும் தீயை கட் டுக்குள் கொண்டுவர முடிய வில்லை.
இதையடுத்து மேலும் சில தீயணைப்பு வண்டிகள் வர வழைக்கப்பட்டு, பல மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த எதிர்பாராத விபத்தில் இருநூறு கார்களும் தீக்கிரையா னதாகக் கூறப்படுகிறது.
எதனால் தீபிடித்தது மற்றும் சேத விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் பெங்களூரு விலும் இதே போன்ற தீ விபத்து ஏற்பட்டதில் முந்நூறுக்கும் மேற் பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.
தற்போது சென்னையிலும் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்