கனிமொழி: ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்

தூத்துக்குடி: பாஜகவும் அதிமுகவும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு அப்பகுதி மக்களுக்கு எதிராகச் சதி செய்துள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சாடியுள்ளார். ஆலையை மூடக்கோரி மக்கள் ஊர்வலமாக வந்தபோது அவர்களைத் துப்பாக்கியால் சுடக்கூடிய அளவுக்கு மனிதத்தன் மையற்ற ஆட்சி நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தங்களுக்கு வேண்டிய பெரிய பண முதலாளிகளுக்காக ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நாட்டைக் காப்பாற்ற முடியாது. இத்தகையவர்களை இந்த நாட்டை விட்டு, முக்கியமாக தமிழ் மண்ணிலிருந்து விரட்ட வேண்டும். தமிழகத்தில் இப்போது நடக்கும் மோசமான ஆட்சியை அகற்ற வேண்டும்,” என்று கனிமொழி மேலும் கூறியுள்ளார்.