கூட்டணி இழுபறி: பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி

கூட்டணி இழுபறி: பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி

2 mins read

தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளைக் கூட்டணிக்காகக் கெஞ்ச வைத்து வேடிக்கை பார்த்து வருகிறது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. இந்தக் கட்சியை தங் கள் பக்கம் வளைத்துப்போட இரு தரப்பும் தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. தேமுதிகவுடன் பேசி முடித்து ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று முன்தினம் கூட்டணி இறுதி அறி விப்பை வெளியிட அதிமுக திட்ட மிட்டு இருந்தது. ஆனால், அதிகப்படியான தொகுதிகள் அதுவும் விருப்பப் பட்ட தொகுதிகள் என தேமுதிக விட்டுக்கொடுக்காமல் முரண்டு பிடிப்பதால் பேச்சுவார்த் தையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படு கிறது. இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரும் விஜயகாந்தைச் சந்தித்து நலம் விசாரித்ததோடு அரசியலும் பேசினார்கள் என்று விஜயகாந்தின் மனைவி பிரேம லதா தெரிவித்ததும் ஆடிப்போனது அதிமுக தரப்பு. எங்கே விஜய காந்த் திமுக அணிக்குச் சென்று விடுவாரோ என்று பரபரக்கிறது அதிமுக கூட்டணி.

கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் ஒரே அணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகதான் அதிக இடங்களில் போட்டியிட்டது. கூட் டணிக்கு அக்கட்சிதான் தலைமை வகித்தது. அதில் இடம்பெற்றிருந்த பாமக தேமுதிகவைக் காட்டிலும் குறைவான இடங்களிலேயே போட்டியிட்டது. அதனை இப்போது சுட்டிக் காட்டி பேரத்தை நீட்டித்துக்கொண் டிருக்கிறது தேமுதிக. பாமக போட்டியிடும் ஏழு இடங்களைக் காட்டிலும் ஓர் இடமாவது அதிக மாகத் தரவேண்டும் என்பது அக் கட்சியின் கோரிக்கை. அத்துடன் தேர்தல் செலவுக்கு அதிமுக கூட்டணி பணம் தரவேண்டும் என் பதும் முக்கிய நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேமுதிகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை தொடருவதாகத் தெரிவித்தார்.