எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும்

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு தேர்தல் களம் காண்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக-பாமக கூட்டணி நீடிக்கும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் அதிமுகவிற்கும் ஆதரவில்லை என்றும்  பாமக கூறியதாகத் தகவல் வெளியாகியது.
இதற்கிடையே, தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இன்னும் பல கட்சிகள் தங்களது கூட்டணியில் இணையக் கூடும் என்றும் பழனிசாமி கூறியிருக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு