உளவுத்துறை அறிக்கை: உற்சாகத்தில் அதிமுக

சென்னை: விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 22 தொகுதிகளைக் கைப்பற்றும் என அதிமுக வட்டாரங்களில் உற்சாகப் பேச்சு அடிபடுகிறது. மாநில உளவுத்துறை அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அதிமுக வட்டா ரங்களில் இவ்வாறு பேசப்படுவ தாகத் தெரியவந்துள்ளது. 
எதிர்வரும் மே மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
இதையடுத்து அரசியல் கட்சி கள் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அன் றாடம் அதற்கான பேச்சுவார்த்தை களை நடத்தி வருகின்றன. 
தொகுதிப் பங்கீடு முடித்த கையோடு மறைமுகப் பிரசாரத்தைத் துவங்கவும் கட்சிகள் திட்டமிட் டுள்ளன. இம்முறை திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் உருவாகி உள்ளன. 
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இயக்குநர் சீமா னின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துக் களம் காண உள்ளன. 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் யாரிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்துப் போட்டியிடப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்த நிலை யில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறிய கட்சியும் அமமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான நிகழ்வு களுக்கு மத்தியில் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுக்கு பொது மக்களிடம் எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பது குறித்து மாநில உளவுத்துறை அண்மையில் ஆய்வு நடத்தியதாகக் கூறப்படு கிறது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்