அபராதம் செலுத்துவதில் சென்னைக்கு முதலிடம்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய விதி மீறல்களுக்காக அபராதம் செலுத்துவதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிமீறல் களுக்காக சென்னையில் உள்ள வாகனமோட்டிகள் ரூ.27 ஆயிரம் கோடியை அபராதம் செலுத்தி உள்ளனர்.
பல்வேறு விதிமீறல்களுக் காக போக்குவரத்து போலி சார் வாகனமோட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். அந்த வகையில் சென்னை யில் ஆயிரக்கணக்கா னோர் விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் செலுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டில் அப ராதத் தொகையாக ரூ.27.21 கோடி வசூலிக் கப்பட்டுள்ளது. இதில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகனமோட்டிகளி டம் தான் அதிக பட்சமாக ரூ.4.64 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களில் நிறுத்தி யதற்காக ரூ.3.33 கோடியும், மது அருந்தி விட்டு வாக னம் ஓட்டியதற்காக ரூ.13.75 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே போல் இதர விதி மீறல்களுக்காக ரூ.2.92 கோடி அபராதத் தொகை வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. வாகன மோட்டிகள் தலைக்கவசம் அணிவது அவசியம் எனப் போலிசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்