லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என நீதிபதிகள் கருத்து

மதுரை: கடுமையான தண்டனை வழங்கினால்தான் லஞ்சப் பழக் கம் ஒழியும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும், லஞ்சம் வாங்குவது இயல் பானது என்ற நினைப்பைக் கடு மையான தண்டனைகள் மூலமே மாற்ற முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த பரணி பாரதி என்பவர் கடந்தாண்டு மின் வாரிய உதவிப் பொறியியலாளர் களுக்கான தேர்வைத் தாம் எழுதி யதாகவும், அத்தேர்வுக்குரிய  கேள்வித்தாள் முன்பே வெளி யானது என்றும் புகார் எழுப்பி உள்ளார். 
இதுகுறித்த காவல்துறை விசாரணை முடிவடைந்த பிறகும் கேள்வித்தாள் வெளியானதற்கான காரணம் தெரியவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் குறிப் பிட்டுள்ளார். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது என கவலை தெரிவித்தனர். 
மேலும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் குறிப் பிட்டனர்.
“லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குவோரைத் தூக்கில் போட வேண்டும். 
“இல்லையெனில் அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறி முதல் செய்வதுடன் தேசத்துரோக வழக்கும் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம்தான் லஞ்சப் பழக் கத்தை ஒழிக்க முடியும்,” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.