‘தேர்தலில் போட்டியிட யார் வந்தாலும் வாய்ப்பளிப்போம்’

சென்னை: புதிய தமிழகத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் வாய்ப்பளிக்கப்படும் என அக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். 
நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சி சார்பில் மட்டுமல்லாமல் மற்றவர்களும் தேர்தலில் போட்டியிட விரும்பினால் விருப்ப மனுவைப் பெறலாம் என்றார். 
விருப்ப மனுவுக்கான விண் ணப்பத்தொகை 10 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகவும், மனு அளித்தவர்களிடம் சென்னையில் மார்ச் 7ஆம் தேதிக்குப் பிறகு நேர்காணல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இதற்கிடையே நேற்று முன் தினம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். 
அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்ய முதல்வர் கெஜ்ரி வாலுக்கு கமல் அழைப்பு விடுத்த தாகவும், அவருடன் அரை மணி நேரம் பேசியதாகவும் கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இதையடுத்துச் செய்தியாளர்க ளிடம் பேசிய கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டது முதல் கெஜ்ரிவால் தொடர்ந்து ஆதரவளித்து வருதாகக் குறிப் பிட்டார். 
“தேர்தல் சமயத்திலும் அவரது ஆதரவு குறித்து நினைவூட்ட வந்தேன். இம்முறை ஆம் ஆத்மி தமிழகத்தில் போட்டியிடவில்லை. எனினும் அவர்கள் சார்பாக போட்டியிடும் எங்களை ஆதரிப் பர்,” என்றார் கமல்ஹாசன். 
தேவைப்பட்டால் நாடாளு மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என்றும், மற்றொரு பக்கம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை  நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“எல்லோருடனும் கைகுலுக்கி விட முடியாது என்பதில் உறுதி யாக உள்ளது மக்கள் நீதி மய்யம். காரணம் மக்களுக்கு உணவு பரிமாறும்போது எங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பெரும் ஆசைதான்,” என்றார் கமல்ஹாசன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை