சுடச் சுடச் செய்திகள்

பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் அறவே நம்பவில்லை என்கிறார் தங்கத் தமிழ்ச்செல்வன் 

கரூர்: அதிமுக, பாஜக, பாமக, இணைந்துள்ள கூட்டணியைத் தமிழக மக்கள் அறவே நம்ப வில்லை என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அமமுக இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றும் என்றார். 
தேர்தலுக்கு முந்தைய நாள் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் உள்ள 100 பொத்தான் களைக் தட்டி சோதித்துப் பார்க்க இருப்பதாகவும், இரு இயந்திரங் கள் முறையாகச் செயல்படா விட்டால் தேர்தலை நிறுத்தி வைக்க வலியுறுத்தப் போவதாக வும் அவர் குறிப்பிட்டார். 
இம்முறை எங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என் றும் அதை வைத்து வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
இத்தேர்தலில் பாட்டாளி மக் கள் கட்சி தனித்து நின்றிருந்தால் கூட ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். என்று குறிப்பிட்ட தங்கத் தமிழ்ச்செல்வன் அதிமுகவும் பாமகவும் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என்றார். 
“பாஜக அதிமுக பாமக ஒருங் கிணைந்திருப்பது ஒரே குட்டை யில் ஊறிய மட்டை என்பதைப் போல் ஆகிவிட்டது. தேர்தலில் வாக்களிக்கும் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். நாங்கள் பூத் கமிட்டிகள் அமைத்து 3 மாதங்களாகி விட்டது. 
இன்றைக்கு உள்ள அரசியல் சூழ்நிலை என்பது ஜெயலலிதா கருணாநிதி மறைவுக்குப் பிறகு வெற்றிடமாக உள்ளது. ஏனெனில்  இப்போதுள்ள தலைவர்களை நம்பி வாக்களிக்க மக்கள் தயா ராக இல்லை,” என்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்குப் பதிலளித்த அவர், நடிகர் கமல்ஹாசனின் கட்சி மட்டுமல்லா மல் வேறு சில கட்சிகளுடனும் பேசி வருவதாகத் தெரிவித்தார். 
அவர் வெளியிட்ட இத்தகவல் தேர்தல் களத்தில் புதிய திருப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.