இளையர்கள் எதிர்பார்க்கும் தலைவர்தான் தினகரன் என்கிறார் அமமுகவில் சேர்ந்த ரஞ்சித்

புதுவை: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நடிகர் ரஞ்சித் திடீரென விலகியுள்ளார். இத னால் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
அதிமுகவுடன் தேர்தலுக்காக கூட்டணி வைத்ததைத் தம்மால் அறவே ஏற்கமுடியவில்லை என் றும், கொள்கைக்கு முரணாக பாமக தலைமை செயல்படுவதாக வும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஞ்சித் சில மாதங் களுக்கு முன்புதான் அதிமுகவில் இருந்து விலகி பாமகவில் இணைந்தார். 
இதையடுத்து அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 
அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சி களிலும் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த அவர், திடீரென நேற்று முன்தினம் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். 
அந்தச் சந்திப்பின்போது பாமக தலைமை, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக எடுத்துள்ள முடிவைத் தம்மால் ஏற்க இயலாது என்றார். இதை யடுத்து அவர் டிடிவி தினகரன் முன்பு அமமுகவில் தம்மை இணைத்துக்கொண்டார்.
“கடந்த வாரம் வரை முதல் வருக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கடுமையாகப் பேசிவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு, இப்போது எதற் காக கூட்டணி அமைக்க வேண் டும்? அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. 
“கொள்கைகளுக்கு எதிராக பாமக தலைமை முடிவெடுத்துள் ளது. அக்கட்சி நடத்திய மது வுக்கு எதிரான போராட்டங்கள், சமூக நீதியைக் காப்பதற்காக மேற் கொண்ட நடவடிக்கைகள், கவர்ந் ததால் பாமகவில் இணைந்தேன். ஆனால், தற் போது அந்தக் கொள்கைகள் என்னவாயிற்று என்று தெரிய வில்லை,” என்று  விளக்கமளித் திருந்தார் ரஞ்சித். இந்நிலையில் அவர் அமமுகவில் இணைந்துள் ளார். நேற்று புதுவையில் தினக ரனைச் சந்தித்துப் பேசினார் ரஞ்சித். கட்சியில் இணைந்த பின்னர் மீண்டும் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், தினகரன்தான் இளையர்கள் எதிர்பார்க்கும் தலைவர் என்றார். 
“தமிழ்நாட்டுக்கு இப்போது நல்ல தலைமை தேவை. அத னால்தான் தினகரன் கட்சியில் இணைந்துள்ளேன். அவர் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர்,” என்றார் ரஞ்சித். 
நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்திருப்பது இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.