தகுதி நீக்கம்: எம்எல்ஏவுக்கான ஊதியத்தை திருப்பித் தர உத்தரவு

புதுடெல்லி: பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தாம் பெற்ற ஊதியத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேல்துரை கடந்த 2006 முதல் 2011 வரை சேரன்மாதேவி தொகுதி எம்எல்ஏவாகப் பதவி வகித்தார். தேர்தலுக்கான மனுத்தாக்கலின்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர், வேல்துரை அரசு ஒப்பந்ததாரர் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என புகார் எழுப்பினார். எனினும் வேல்துரை தேர்தலில் போட்டியிட தேர்தல் அதிகாரி அனுமதித்தார். இந்நிலையில் அவர் வெற்றி  பெற்றதை அடுத்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி ஆனது. அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வேல்துரை தேர்வு பெற்றது செல்லாது என அறிவித்தது. இதைச் சுட்டிக் காட்டிய சட்டப் பேரவைச் செயலர், வேல்துரை தம் பதவிக் காலத்தில் பெற்ற 21.58 லட்சம் ரூபாயைத் திருப்பிச் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பினார். வேல்துரை உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வேல்துரை தாம் பெற்ற ஊதியத்தைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு