பாஜக கோலமிட்டு ஏமாந்த மக்கள்

கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வீட்டு வாசலில் பாஜகவின் சின்னமான தாமரையைக் கோலமாக வரைந்துள்ளனர். ஒரு சிலர் அப்பகு திக்கு வந்து இரவு நேரம் வீட்டின் முன் தாமரை கோலத்தை வரைந்து, அதன் நடுவில் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் ஆயிரம் ரூபாய் அல்லது அந்த தொகை பெறுமானமுள்ள பொருள் வழங்கப்படும் என்று கூறி அகல் விளக்கையும் கொடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் அவ்வாறு கோலமிட்டு, பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.   படம்: தமிழக தகவல் ஊடகம்