சென்னையில் சைக்கிள் பகிர்வு சேவை விரிவாக்கம்

சென்னை: சென்னையில் முதற் கட்டமாக ஆறு இடங்களில் 60 ‘சைக்கிள் பகிர்வு’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம், டவர் பூங்கா, அண்ணா நகர் கிழக்கு, சிந்தாமணி சந்திப்பு, வள்ளியம்மாள் உயர்நிலைப்பள்ளி, கந்தசாமி கல்லூரி ஆகிய இடங் களில் சைக்கிள் பகிர்வுத் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 25 இடங்களில் 250 சைக்கிள்கள் திட்டம் விரைவில் தொடங்கப்பட வுள்ளது. 
இந்த ‘சைக்கிள் பகிர்வு’ திட் டத்தில் கைத்தொலைபேசி செயலி மூலம் ‘கியூஆர்’ கோடு மற்றும் ‘மறைச்சொல்’ மூலம் சைக்கிள் களை எளிதில் பெறலாம்.  ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. புதிய சைக்கிள் பகிர்வுத் திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக் கியம், உடல் வலுவாக அமைய இந்த சைக்கிள் பகிர்வு சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் சைக்கிள் பகிர்வு சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய் என வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படம்: கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு