திமுக அணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்

சென்னை: விஜய்காந்தின் தேமுதிக கட்சி இன்னமும் கூட்டணி குறித்து முடிவு எடுக்க வில்லை. எந்தப்பக்கம் அது சாயும் என்பது புரியாமல் தமிழக அரசியல் குழப்பம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் திமுக அணியில் தேமுதிகவுக்கு நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் விரை வில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவுக்கு போனசாக ஒரு மேலவை இடம் வழங்கவும் திமுக தயாராகி வருகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதி கவைச் சேர்க்க பாரதிய ஜனதா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
அதே சமயத்தில் திமுகவும் அக்கட்சியுடன் பேரம் பேசியது.
ஆனால் தேமுதிக உறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை.

கடந்த சில நாட்களாக கூட் டணி தொடர்பாக திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனி மொழியும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் பேச்சு நடத்தினர்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனும் தேமுதிக இளைஞரணி மாநில செயலர் சுதீஷ்‌ஷும் கூட்டணி தொடர்பில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தேமுதி கவுக்கு நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு மேலவை இடமும் வழங்க திமுக முன் வந்துள்ளது. இதையொட்டி தொகுதி பங்கீட்டையும்  தேமுதிக ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படு கிறது. தற்போது தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனிமொழி, சென்னை திரும் பியதும் ஓரிரு நாட்களில் விஜய காந்தை சந்தித்து கூட்டணியை முடிவு செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அதன்பின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.