பல தடவை தற்கொலைக்கு  முயன்ற நிர்மலாதேவி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்தக் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
  அவர் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர் களிடம் பேசினார். தன் கட்சிக்காரரைக் காவலர்களும் அதிகாரிகளும் கொடுமைப்படுத்துவதாகவும் அவற்றின் காரணமாக நிர்மலாதேவி பல தடவை தற்கொலைக்கு முயன்றதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை