ஸ்டாலின்: செம்மொழி நிறுவன உறுப்பினர் நாகசாமியை நீக்குக

சென்னை: இந்தியாவில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட் டணி ஆட்சி நடந்தபோது அமைக் கப்பட்ட செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஏறக்குறைய செயலிழக்கச் செய்து விட்டது என்று தமிழ்நாட்டின் முக் கியமான எதிர்க்கட்சியான திமுக கடுமையாகச் சாடியது. 
தமிழருக்கும் தமிழ்மொழிக்கும் பாதகமாகச் செயல்பட்டு வரும் ஒருவரை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப் படும் அதிபர் விருதுக்குப் பேராளர் களைத் தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக நியமித்து அதன் மூலம் மத்திய அரசு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் காட்டமாகத் தெரிவித்தார். 
செம்மொழியான தமிழ் மீது இடைவிடாமல் நஞ்சைக் கக்கி வரும் நாகசாமி என்ற அந்த உறுப்பினரை உடனடியாக நீக்கும் படி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை ஸ்டாலின் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
தேர்தல் வரும் நேரத்தில் விருது குழு அமைக்கப்பட்டு இருப்பது தீய உள்நோக்கம் கொண்டது என்றும் தமிழைச் சிறுமைப்படுத்தும் வகை யில் நடந்துகொண்டு வரும் நாக சாமிக்கு அந்தக் குழுவில் இடம் அளிக்கப்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழி தமிழ் ஆய்வு நிறு வனத்தின் தலைவராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது தமிழ்மொழிக்குச் செய் யும் மாபெரும் துரோகம் என்று  ஸ்டாலின் தெரிவித்தார். 
தமிழர்களின் உணர்வுடன் விபரீத விளையாட்டு நடத்தவேண் டாம் என்று பிரதமர் மோடியின் பாஜக அரசாங்கத்தை திமுக தலைவர் எச்சரித்தார்.