எம்எல்ஏ: சபாநாயகர் கை இருக்காது

காரைக்குடி: அமமுக ஆதரவு எம்எல்ஏ ரத்னசபாபதி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் பேசியபோது, முதல்வரும், துணை முதல்வரும் தன்மீது கோபமாக இருப்பதாக கொறடா தாமரை ராஜேந்திரன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
“அவர்களின் பேச்சைக் கேட்டு என்னை நீக்க கை யெழுத்து போட்டால் அதுதான் நீங்கள் போடும் கடைசி கையெழுத்தாக இருக்கும். பிறகு கை இருக்காது என்று பதில் சொன்னேன். அதோடு, அந்த காகிதத்தை மூலையில் போட்டுவிட்டனர்,” என்று ரத்னசபாபதி பேசினார்.