மார்ச் 6 முதல் அதிமுக, திமுக பிரசாரம்: மோடி, ராகுல், சோனியா படையெடுப்பு

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர் தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலை யில், அந்தத் தேர்தலில் மிக முக்கிய மாநிலமாக இருக்கும் என்று கருதப்படும் தமிழ்நாட்டிற் குத் தேசிய தலைவர்கள் படை எடுக்கிறார்கள். 
தமிழ்நாட்டின் மிக முக்கிய கட்சிகளான அதிமுகவும் திமுக வும் மார்ச் 6ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகின் றன. அதிமுக கூட்டணியில் பாஜக சேர்ந்து இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி தங்கள் கூட்டணியின் தேர்தல் பிர சாரத்தை சென்னை அருகே வண் டலூரில் தொடங்கி வைக்கிறார். 
அந்தக் கூட்டத்தில் கூட் டணிக் கட்சிகளுக்கான தொகுதி கள் பற்றிய விவரங்களும் வெளி யிடப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுடன் பாமகவும் இணைந்து உள்ளது. இந்த அணியில் தேமுதிக, தமாகா ஆகியவையும் இணையும் என்று தெரிகிறது. 
இந்த நிலையில், அதிமுக கூட்டணியை எதிர்த்து திமுக தலைமையில் அமைந்துவரும் போட்டி அணியின் திமுக பிரசாரக் கூட்டமும் மார்ச் 6ஆம் தேதி தொடங்கும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. 
காங்கிரஸ், முஸ்லிம் லீக், மதிமுக, கம்யூனிஸ்டுகள், விடு தலை சிறுத்தைகள் முதலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திமுக, அதே மார்ச் 6ஆம் தேதி விருது நகரில் தன்னுடைய தென் மண்டல மாநாட்டை பிரம்மாண்ட மாக நடத்த திட்டமிட்டுள்ளது.