ஒரே நேரத்தில் அதிகமானோர் நடனமாடி கின்னஸ் சாதனை

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி இன்று தொடங்கி  8ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கின்னஸ் சாதனை முயற்சியாக 10 ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டிய இசைக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் இந்த நாட்டிய நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து  7 ஆயிரத்து 195 கலைஞர்கள் கின்னஸ் முயற்சியில் பங்கேற்றனர். நேற்றுக் காலை 8.45 மணிக்குத் தொடங்கிய நடன நிகழ்ச்சி சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. இதற்கு முன்னர் சென்னையில் 2017ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரத்து 525 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியது இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.