அச்சுறுத்தல்: விழிப்புநிலையில் சென்னை விமான நிலையம்

சென்னை: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு ஏழு அடுக்கு பாது காப்புப் போடப்பட்டுள்ளது. 
புல்வாமா தீவிரவாதத் தாக்குத லுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலாக் கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக பாகிஸ் தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் 60 மணி நேரமாக பிணையில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற மான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையின்பேரில் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களி லும் பலத்த பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

சென்னை விமான நிலையம் ஏழு அடுக்கு பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதற் கான அனுமதிச் சீட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்றுக் காலை முதல் அமலுக்கு வந்தன. அடுத்த உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
முன்னதாக, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், அனைத்து மாநில உயர் போலிஸ் அதிகாரிகள் மற் றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரையும் உஷார்படுத்தி இருக்கிறது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம்

23 Aug 2019

சிவனுக்கு அப்துல் கலாம் விருது

கீரைக்கட்டுகளைப் போல் எலிகளை ஆறு  ஆறு எலிகளாகக் கட்டி ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.  படம்: ஊடகம்

23 Aug 2019

கும்பகோணத்தில் எலிக்கறி விற்பனை அமோகம்