திமுக அணியில் விசிகவுக்கு மீண்டும் இரு தொகுதிகள்

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி அநேகமாக இறுதி செய்யப்பட்டுவிட்டது. இது வரை அந்தக் கூட்டணியில் ஐந்து கட்சிகளுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
முதன்முதலாக காங்கிரஸ் கட் சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும் தலா ஓர் இடம் என்று முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இதரக் கட்சிகளுடனான பேச்சு வார்த்தை இழுபறியில் இருந்தது.
இந்நிலையில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் அக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டா லின் நேற்று முன்தினம் ஆலோ சனை நடத்தினார். 
அதனைத் தொடர்ந்து நேற்று காலையில் திமுக தலைமையக மான அண்ணா அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவள வனுடன் மு.க. ஸ்டாலின் பேச்சு நடத்தினார். முடிவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் விசிக வுக்கு இரு தொகுதிகளை ஒதுக்க அப்போது உடன்பாடு ஏற்பட்டது. 
சிதம்பரம், விழுப்புரம், திரு வள்ளூர் ஆகிய மூன்று தொகுதி களில் ஏதேனும் இரண்டு அக் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என் றும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டி யிடக்கூடும் என்றும் கூறப்படு கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலி லும் திமுக அணியில் போட்டி யிட்ட விசிக இரண்டிலும் தோற் றது. அக்கட்சிக்கு 1.5 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன.
இந்நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக் கியது. 
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. 
கூட்டணி முடிவானதும் திமுக தனது பிரசாரத்தைத் தொடங்க உள்ளது. நாளை விருதுநகரில் நடைபெறும் பேரணி அதன் முதற் கட்டமாக அமையும். 
2004ஆம் ஆண்டு மக் களவைத் தேர்தலின்போதும் அந்த ஆண்டு பிப்ரவரி 21, 22 தேதிகளில் விருதுநகரில் திமுக தென்மண்டல மாநாட்டை நடத் தியது. அந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது.