அதிமுக-பாஜக-பாமக கூட்டணியில் இணைகிறது தேமுதிக; இன்று இறுதி முடிவு அறிவிப்பு

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜகவுக்கு ஐந்து, பாமகவுக்கு ஏழு, புதிய தமிழகத்திற்கு ஒன்று,  புதிய நீதிக் கட்சிக்கு ஒன்று எனத் தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமு திகவையும் தன்பக்கம் இழுக்க அதிமுக பெரிதும் முயன்று வரு கிறது.
திமுக கைவிட்டுவிட்ட நிலை யில் அதிமுகவில் இணையவே தேமுதிகவும் விரும்புவதாகக் கூறப் படுகிறது. இருப்பினும் பாமகவைப் போலவே தனக்கும் ஏழு தொகுதி களை ஒதுக்கவேண்டும் என அக் கட்சி அடம்பிடிப்பதாகச் சொல்லப் படுகிறது.

அதோடு, எப்படியாவது விஜயகாந்தை கூட்டணிக்குக் கொண்டு வாருங்கள் என்று பாஜக தலைமை வலியுறுத்தி வருவதால் அதிமுக தவிப்பில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்தே, தமிழகத்தின்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்தை ரகசியமாகச் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஐந்து நாடாளு மன்றத் தொகுதிகளையும் ஒரு மேலவைத் தொகுதியையும் தர அதிமுக ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு மேலவைத் தொகுதியையும் விஜயகாந்த் கேட்க, அதற்கும் ஓபிஎஸ் சம்மதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தாலும், சிக்கல் தீர்ந்த பாடில்லை. விஜயகாந்த் கேட்ட ஆறு தொகுதிகளில் நான்கு ஏற் கெனவே பாமகவுக்கு ஒதுக்கப் பட்டுவிட்டதாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு