கனிமொழிக்கு எதிராக   தமிழிசை போட்டி

சென்னை:  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் பேசியபோது, கட்சி தலைமை எங்கு போட்டியிடச் சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியைக் கேட்டுவருகிறோம்.  அதே போல் பாஜக பலமாக இருக் கும் 5 தொகுதிகளை நாங்கள் கேட்டு இருக்கிறோம். இது தொடர்பாக அதிமுக தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். பாஜக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.