100 இளம்பெண்களை ஆபாசப் படம்பிடித்து மிரட்டிய முக்கிய குற்றவாளி கைது

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கள், பெண் மருத்துவர், குடும்பப் பெண்கள், பணிக்குச் செல்லும் இளம்பெண்கள் என 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி, அவர்களை  காதலிப்ப தாகக் கூறி காரில் அழைத்துச் சென்று ஆபாசக் காணொளி எடுத்து மிரட்டிப் பணம் பறித்த முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டான். 
பெண்களை ஆபாசக் காணொளி எடுத்து அத்துமீறிய வழக்கில் ஏற்கெனவே திருநாவுக் கரசின் கூட்டாளிகள் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார்  உட்பட எழுவர் கைதுசெய்யப்பட்டனர். 

இந்நிலையில், பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஃபேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி ஆபாசப் படம் எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த  திரு நாவுக்கரசை மகினாம்பட்டி பகுதி யில் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். 
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாகக்  கருதப் பட்டு வந்த திருநாவுக்கரசு சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பெண்களை மயக்கி ஆபாச காணொளி எடுத்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் புகார் அளித்த பெண் மட்டுமே போலி சுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மற்ற பெண்கள் தனக்கு ஆதர வாகவே இருப்பதாகவும் கூறி யிருந்தார்.

தொடர்ந்து திங்கட்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்ட திருநாவுக்கரசு, தாம் தவறு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணே தண்டிக்கட்டும் என் றும் தாம் பொள்ளாச்சி வரவுள்ள தாகவும் கூறியிருந்தார். வழக்கை திசை திருப்பும் வகையில் திரு நாவுக்கரசு ஆடியோ, காணொளி களை வெளியிட்டு வருவதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் வைத்துத் திருநாவுக்கரசை காவல்துறை யினர் கைது செய்தனர். திருநாவுக்கரசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பேஸ்புக் மூலம்  பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12ஆம் தேதி கல்லூரி மாணவியைக் காரில் அழைத்துச் சென்று ஆபாச விடியோ எடுத்து அத்துமீற முயன்றதாக சபரி (எ) ரிஷ்வந்த் உள்பட மூன்று பேர் பொள்ளாச்சி கிழக்குப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த மாணவியின் சகோதரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சபரி (எ) ரிஷ்வந்த்தின் நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட போது, இவர்கள் இதுபோன்று ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு