மதிமுகவுக்கு  ஒரு மக்களவை;   ஒரு மாநிலங்களவை

சென்னை: திமுக கூட்டணி யில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  
திமுக கூட்டணியில் மதிமுகவுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்வதென உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாகக் கூறினார். 
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி நாளை 7ஆம்  தேதி முதல் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனத் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு