கல்லூரியில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

சென்னை:  1860களின் கடைசியில் கட்டப்பட்ட சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இதுவரை அறியப்படாமல் இருந்த சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் ஆர். ராகவன் மாநில தொல்லியல் துறைக்குத் தகவல் அளித்துள்ளார். தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு ராகவன் இது தொடர்பாக கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அதில் இந்தச் சுரங்கப்பாதை தொடர்பாக தொல்லியல் துறை  ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.