தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு  அரசு வேலைவாய்ப்பு, ஊக்கத்தொகை 

சென்னை:  விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி விளையாட்டுப் போட்டியில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையையும் ஊக்கத்தொகையையும் நேற்று முதல்வர் வழங்கினார். படம்: ஊடகம்