ரூ.100 பணத்திற்காக ஆரத்தி எடுப்பதற்கு குவியும் பெண்கள்

கோவை:  தமிழ்நாட்டு மக்களி டையே எந்தவொரு முக்கிய நிகழ்வாக இருந்தாலும் ஆரத்தி எடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. 
புதுமணத் தம்பதிகள், வெற்றி பெற்று திரும்புபவர்கள் என இந்த ஆரத்தி எடுக்கும் பட்டியல் நீள்கிறது. 
இவ்விதத்தில் தேர்தல் கள மும் அரசியல்வாதிகளின் வரு கையால் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தேர்தல் கூட்டங்களுக்கு வரும்  எம்எல் ஏக்களுக்கு ஆரத்தி எடுக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. 

அண்மைக்காலமாகத்தான் இந்த ஆரத்தி எடுக்கும் பெண் களின் எண்ணிக்கை குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. 
பொதுநிகழ்ச்சிகளுக்கு வரும் தமிழக எம்எல்ஏக்களுக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு குறைந்தது ரூ.100 வழங்குவது வழக்கமாகி வருகிறது.
இதனால் நிகழ்ச்சியில் பங் கேற்க வரும் எம்எல்ஏக்களை பெண்கள் ஆரத்தியுடன் சூழ்ந்து கொள்கின்றனர். 
அப்படி சூழ்ந்துகொள்ளும் அவர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆரத்தி எடுத்தபின் அவர்களிடம் பணம் வாங்காமல் வழிவிடுவ தில்லை. இதனால் தர்ம சங்கடத் துடன் என்ன செய்வது என்று தெரியாமல் எம்எல்ஏக்கள் தடுமாறிப் போகின்றனர். 

அதனால் விழாக்களுக்கு வரும் அவர்கள் தாமதமாகவே நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலை ஏற்படுகிறது.
அண்மையில் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற தென்னரசு, ராமலிங்கம் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்க சுமார் 400 பேர் குவிந்துள்ளனர். 
இவர்கள் 400 பேரும் அவர் களுக்கு ஆரத்தி எடுத்துத் தலா ரூ. 100 பெற்றுக்கொண்ட பின்பே எம்எல்ஏக்கள் வளர்ச்சிப்பணி துவக்கவிழாவில் பங்கேற்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்