பிரதமர் மோடி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்

விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு இடம்பெறும் என்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் நேற்று நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மோடி அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பங்கேற்றார்.