திமுகவுக்கு 20; கூட்டணிக் கட்சிகளுக்கு 20 இடங்கள்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலை யில், அதை  எதிர்கொள்ள வசதி யாக தமிழகத்தில் ஆளுங் கட்சியான அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் எதிர்க்கட்சியான திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகி உள்ளன.
20 தொகுதிகளைக் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள நிலை யில், எஞ்சியுள்ள 20 தொகுதி களில் திமுக போட்டியிடுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் மொத் தமுள்ள 40 தொகுதிகளில் புதுச் சேரி உட்பட 10 தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சிக்குத் திமுக ஒதுக்கி உள்ளது. 
விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக வுக்கு ஒரு தொகுதியும் மாநிலங் களவையில் ஒரு இடமும் வழங்கப் பட்டுள்ளது.  

 திமுக கூட்டணியில் தொகு திப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில்,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது,  “திமுக 20 தொகுதி களில் போட்டியிடக்கூடிய சூழ் நிலை உருவாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும் மதி முகவுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூ னிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு தலா 2 தொகுதி களும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்குத் தலா ஒரு தொகுதியும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கான பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
“இன்று 7ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என் பது குறித்து முடிவு செய்யப்படும்,” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்

17 Jul 2019

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி