திமுக: தேமுதிகவுக்கு இடமில்லை 

சென்னை: தமிழகத்தை ஆளும் அதிமுக பக்கம் சாய்வதா? அல்லது எதிர்க்கட்சியான திமுக பக்கம் சாய்வதா என்ற குழப் பத்துடனேயே பல நாட்களையும் கழித்துவந்த தேமுதிக, இறுதியில் திமுகவுடன் கூட்டணி சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
  ஆனால் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதற்கு தங்களிடம் போதிய அளவில் இடமில்லை என்று கூறி கழற்றிவிட்டுள்ளது திமுக.
 அதிமுக கூட்டணியில் சேர் வதற்காக சுதீஷ் பேசிவரும் நிலையில்  திமுக பொருளாளர் துரை முருகனுடன் தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசிவருவதாக வும் தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக, தேமுதிக கூட்டணி இழுபறியில் இருந்துவரும் நிலையில், தாங்கள் தற்போது திமுக கூட்டணிக்கு வர விருப் பப்படுவதாக தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் கேட்ட தாக திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கூட்டணி தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்துவிட்ட நிலையில் தேமுதி கவின் சுதீஷ் எங்கள் கூட்டணியில் இடம்பெற விருப்பப்படுவதாக தெரிவித்ததாகவும் அதற்கு எங்க ளிடம் இடமில்லை என்று தெரி வித்துவிட்டதாகவும் கூறியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

அதிமுக, தேமுதிக இடையே யான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. பிரதமர் மோடி பங் கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இறுதியாக விஜயகாந்தின் படம் இடம்பெற்றது. ஆனாலும் கூட் டணி பேச்சுவார்த்தை இழு பறியிலேயே நீடித்துவந்தது.
இந்நிலையில் துரைமுருகன் செய்தியாளாகளிடம் பேசுகையில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என்னைத் தொடர்புகொண்டார். தாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட் டணியில் இடம்பெற விரும்பு வதாகத் தெரிவித்தார். 
“நீங்கள் அதிமுகவுக்குச் செல்வதாக தெரிவித்தீர்கள். அதனால் மற்ற கூட்டணி கட்சி களுக்கு நாங்கள் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டோம்.
“இப்போது கூட்டணி போக 20 தொகுதிகளில்தான் நாங்களே போட்டியிடுகிறோம். எங்களிடம் உங்களுக்கு கொடுப்பதற்கு வேறு இடம் கிடையாது,” எனத் தெரி வித்துவிட்டோம் என்று  கூறினார். 
தேமுதிகவினர் நிலையான முடிவை எடுக்காமல் மாறி மாறி செயல்பட்டால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு