ஆம்னி பேருந்து பயணியிடம் ரூ.1.5 கோடி சிக்கியது

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மி டிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பேருந்தில் இருந்து ரூ.1.5 கோடி பணத்தை போலிசார்  கைப் பற்றினர். 
தான் ஒரு வெள்ளி வியாபாரி என்றும் வெள்ளி வாங்குவதற்காக இந்தப் பணத்தை தான் சென் னைக்கு கொண்டுவந்ததாகவும் பணத்துடன் பிடிபட்ட நீரஜ் குப்தா   என்பவர் தெரிவித்தார். 
இருப்பினும் இந்த 1.5 கோடி பணத்தை எடுத்து வந்ததற்கான முறையான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் பணத் துடன் பிடிபட்ட நீரஜ் குப்தாவையும்  பணத்தையும் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே எளா வூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று காலை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை  செய்தபோது, அந்தப் பேருந்தில்  பயணம் செய்த சந்தேகப்படும் வகையில் இருந்த நீரஜ் குப்தா இரு பெரிய கறுப்புப் பைகளை வைத்திருந்தார். 
அந்தப் பைகளைக் காவல் துறையினர் சோதனை செய்த போது, அதில் செய்தித்தாள்களில் சுற்றப்பட்டு கட்டுக்கட்டாக ரூ.2,000, ரூ.500 பணப் பொட் டலங்கள் நிறைத்திருப்பது தெரிய வந்தது. 

அந்தப் பணம் ஏது? எதற்காக கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் தொடங்கினார்.  
காவல்துறை விசாரணையில் பணத்துடன் வந்த நபர் தெலுங் கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஹிம்மத் நகர் நாராயண்குடாவைச் சேர்ந்த நீரஜ் குப்தா, 47, என்பது தெரியவந்தது. அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். 
பேருந்து பயணி நீரஜ் குப்தாவிடம் விசாரிக்கும் காவல்துறையினர். அருகில் அவர் வைத்திருந்த ரூ.1.5 கோடி பணம். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்