38 தொகுதிகளில் அ.ம.மு.க நேரடி  போட்டி என டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 38 தொகுதிகளில் நேரடியாகப் போட் டியிடுவதாகவும்  கூட்டணிக் கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்  அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள் ளார்.
 மதுரையில்  புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், “அமமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன் றம் தெளிவாக உத்தரவு பிறப்பித் துள்ளது.  
“இடைத்தேர்தல் வந்தால் அமமுகவுக்கு  சின்னம் வழங்க வேண்டும் என  அந்த உத்தரவில் உள்ளது.  மேலும்,  அதிமுகவின் ஒரு அணி தான் அமமுக என்று குறிப்பிட்டிருக்கும் நிலையில், கட்சியின்  பெயரை எப்படிப் பதிவு செய்ய முடியும்?  
“அதிமுக மீதான உரிமைக்காக போராடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால்  அமமுக=வை  நாங்கள் பதிவு செய்யவில்லை. 
“நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தச் சின்னத்தைக் கேட்பதில் தவறு இல்லை.  
“குக்கர் சின்னம், தமிழகம் முழுவதிலும் சென்று சேர்ந்துள் ளது.  
“மக்களவைத் தேர்தல் கூட் டணி தொடர்பாக   பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின. 
“ஆனால்,   முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவுக்கு  எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களுடன்  கூட்டணி வைக்க அமமுக விரும்பவில்லை. மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர்.  கட்சிக்கான  வாக்கு வங்கி என்பதெல்லாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக  தலைவர் கருணாநிதி காலத்துடன் முடிந்துவிட்டது.  
“தற்போது  ஒவ்வொரு தேர்தலி லும் புதிய கணக்குதான் எடு படுகிறது. 
“மக்களவைத் தேர்தலில் போட்டியிட எங்களுடைய கூட்ட ணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
“மேலும் ஒரு கட்சியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அக் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப் பட்டதுபோக, மீதமுள்ள  38 தொகுதிகளில் அமமுக போட்டி யிடும்,” என்றார் தினகரன்.