பிரதமர் மோடியைப் பார்த்து ஸ்டாலின் கேட்ட கேள்விகள்

பிரதமர் மோடியைப் பார்த்து ஸ்டாலின் கேட்ட கேள்விகள்

1 mins read

* நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கேட்டோமே என்ன ஆயிற்று? * பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு கூறியது என்ன ஆயிற்று? * கஜா புயல் நிவாரணம் எங்கே? * ஜி.எஸ்.டி ரூ.4,000 கோடி எங்கே? * காவிரியின் குறுக்கே கர்நாட கத்தில் மேகதாது அணை அமைக்கும் முயற்சியை ஏன் மத்திய அரசு தடுக்கவில்லை? * சேலம் உருக்காலைத் திட்டம் என்னவாயிற்று? * கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசு தடை போட்டதேன்? * குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஆய்வுத் தளம் அமைக்கப்படுமா? படாதா? * எதையுமே செய்யாமல் எந்த முகத்தோடு வாக்குக் கேட்டு வருகிறீர்கள்? என்று மேலும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்ட ஸ்டாலின், இவற்றுக்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றார்.