‘சிறைக்குச் செல்லாமலிருக்கவே  அதிமுகவினர் மோடிக்கு புகழாரம்’

விருதுநகர்: ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுகவை மிரட்டி அதனு டன் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந் தியா­வில் பலமுறை மாநில அரசு களைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. 
ஆனால், திமுக = காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத் துள்ளது என்று புதன்கிழமை சென்னை அருகே நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரதமரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். 
விருதுநகரில் நடந்துவரும் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியின் சாடலுக்குப் பதில் அளித்துள்ளார்.
“காங்கிரசுடன் திமுக தேர்தல் காலத்தில் மட்டும் கூட்டணி வைத்திருக்கவில்லை. நாட்டுக்கு ஆபத்து நேர்ந்த நேரத்தில் எல்லாம் சேர்ந்து நின்றிருக்கிறது. 
“பாஜக = அதிமுக கூட்ட ணியோ அவ்வாறில்லை. ஊழல் வழக்குகளைக் காட்டி அச்சுறுத்தி அதிமுகவினரைப் பணியச் செய்துள்ளது பாஜக. சிறைக்குச் செல்லாமல் இருப்பதற்காக பாஜக விற்கு அடிபணிந்து கூட்டணியாக இணைந்துள்ளனர் அதிமுகவினர்.
“பாஜக அமைத்துள்ள இந்தக் கூட்டணியை, எந்தத் தலைப்பில் அழைப்பது என பிரதமர் மோடி பதில் கூற வேண்டும். 
“அதிமுக அமைச்சர்களின் குட்கா ஊழல், சிபிஐ விவகாரங்கள் எங்களிடம் சிக்கி இருக்கின்றன. வருமான வரித்துறை மூலம் அதிமுகவினரின் ரகசியம் சிக்கி இருக்கிறது, அமலாக்கத் துறை யின் மூலம் பல ஊழல்கள் அகப் பட்டிருக்கின்றன. 
போதாக் குறைக்கு கொடநாடு விவகாரம் வேறு இருக்கிறது.  சொல்லவா வேண்டும்-? இவற்றை யெல்லாம் காட்டி மிரட்டித்தானே அதிமுகவோடு கூட்டணி வைத்தி ருக்கிறார்கள். எந்த அடிப்படையில் பாஜக=அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என பிரதமர் மோடி விளக்க முடியுமா,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு