'ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்'

'ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்'

1 mins read
8e8987c4-08e6-4e93-bad9-8cf49f953511
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் -

சென்னை: ரஃபேல் விமான பேரத்தில் நடந்த ஊழலை அம்ப லப்படுத்திய ஊடகவியலாளர்க ளுக்குத் துணை நிற்க ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். "போர் விமான பேரம் தொடர்பான உண் மைகளை அம்பலப்படுத்திய 'தி இந்து' மற்றும் ஏ.என்.ஐ செய்தி நிறு வனம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறி யிருக்கிறார். ஊடகச் சுதந்திரத்தைப் பறிக் கும் விதமாக இந்தக் கருத்து அமைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி ரஃபேல் விமான பேரத்தில் உண்மையை வெளிப்படுத்திய 'தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம், ஏ.என்.ஐ செய்தி நிறு வனம் ஆகியவற்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அரசின் அச் சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.