தேமுதிகவின் இழுபறியால் தமாகாவுக்கு கூடுதல் தொகுதி கிடைக்க வாய்ப்பு

சென்னை:  தேமுதிகவின் செயல் பாடுகள் திமுக, அதிமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தங்கள் கூட்டணியில் இணையும் பட்சத்தில் தமாகாவுக்கு கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்ப தாகக் கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பில் தேமுதிக தலைமை முன்வைத்த கோரிக்கைகளை திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் ஏற்க மறுத்துள்ளன. இதனால் தனித்துப் போட்டியிடுவதா, அல் லது சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதா என தேமுதிக தலைமை தீவிர ஆலோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.
அதே சமயம் பாஜகவின் உதவியோடு அதிமுக கூட்டணி யில் கணிசமான தொகுதிகளைப் பெற முடியும் என தேமுதிக தலைமை நம்புவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிக மட்டுமல்லாமல், ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவுடனும் அதிமுக தலைமை கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 

தங்களுக்கு மூன்று தொகுதி களை ஒதுக்க வேண்டும் என தமாகா விடுத்த கோரிக்கையை பரிசீலித்த அதிமுக தலைமை, ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க இயலும் எனக் கூறியது.
ஆனால் தமாகா தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி யதை அடுத்து, அக்கட்சிக்கு மாநி லங்களவையில் ஓர் இடத்தை அளிக்க அதிமுக முன்வந்துள்ள தாகத் தெரிகிறது.
மேலும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முறியும் நிலை ஏற்பட்டால் தமாகாவுக்கு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.