தூய்மை நகரங்கள் பட்டியலில் 24 இடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டது கோவை நகரம்

கோவை: நாட்டிலேயே மிகத் தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியலில் கோவைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 16ஆவது இடத்தில் இருந்த கோவை நகரம் தற்போது 40ஆவது இடத்துக்கு இறங்கி யுள்ளது. இதனால் கோவை மாநகராட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டம் அறிமுகமானது முதல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவையிலும் தூய்மைப் பணியை முடுக்கிவிட்டது கோவை மாநகராட்சி. இதன் பலனாக கடந்த ஆண்டு தூய்மை நகரங்க ளின் பட்டியலில் கோவைக்கு 16ஆவது இடம் கிடைத்தது.
இந்நிலையில் அண்மையில் வெளியான இந்தப் பட்டியலில் கோவைக்கு 40ஆவது இடமே கிடைத்துள்ளது. நகரின் தூய்மை குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசுக் குழுவினர் கோவை மாந கராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமலேயே ஆய்வை மேற் கொண்டதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் வழக்கமாக மார்ச் மாதத் துவக்கத்தில் நடத்தப் படும் ஆய்வை, மத்தியக்குழு ஜனவரி மாதமே ரகசியமாக மேற் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சமயம் மாநகராட்சி நிர்வா கம் குப்பைகளைச் சேகரிக்கும் முறை, அவை முறையாக தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகி றதா, தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிப்புப் பணி சரிவர நடக்கி றதா? என மத்தியக் குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள் குறித்த தரப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் முதலி டத்தைப் பெற்றுள்ள நிலையில், திருச்சிக்கு 39ஆவது இடம் கிடைத்துள்ளது.
தேசிய அளவில் 40ஆவது இடம் கிடைத்தது வருத்தம் அளித் தாலும், தமிழக அளவில் கோவைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது என்றும், இனி தூய்மைப் பணிகள் மீண்டும் முன்பு போல் வேகமெடுக்கும் என் றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.