கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது மக்களுக்காக உழைப்பதே தமது விருப்பம் என்கிறார் மோடி

சென்னை: மக்களின் கனவுகளை நனவாக்கவும், இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டிற்காகத் தியாகம் செய்தவர்க ளின் கனவுகளை நிறைவேற்றவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையின் புறநகர்ப் பகுதி யில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எந்தவித மான மன்னிப்புப் போக்கும் இனி இந்திய அரசிடம் இருக்காது என்றார்.
காங்கிரசை சேர்ந்த ஒரு தலைவர் தம்மைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிய தாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தாம் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், மக்களுக்காக தொடர்ந்து உழைக்க விரும்புவதாகவும் குறிப் பிட்டார்.
“என்னை விமர்சனம் செய் தாலும் வசைப்பாடினாலும் அது என்னைக் கவலை கொள்ளச் செய்யாது. கொலை மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். என்னிடம் இருப்பதை எல்லாம் நான் இந்தி யாவை வலிமைமிக்க நாடாக ஆக்குவதற்கு மட்டுமே பயன் படுத்த விரும்புகிறேன்,” என்றார் மோடி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்

17 Jul 2019

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி