பிரேமலதா ஆவேசம்: தேமுதிக தனித்துப் போட்டியிடத் தயார்

தேமுதிக எந்த ஒரு கூட்டணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் பொரு ளாளாரும் விஜயகாந்தின் மனைவி யுமான பிரேமலதா தெரிவித்துள் ளார். தேர்தலில் தனித்துப் போட்டி யிட வேண்டும் என்ற கலாசாரத்தை உருவாக்கியதே தங்கள் கட்சிதான் என்றார் அவர். கூட்டணி அமைப்பது தொடர் பாக தேமுதிகவுக்கும் திமுகவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலை யில் நேற்றுக் காலை செய்தி யாளர்களைச் சந்தித்த பிரேமலதா மிகவும் ஆவேசத்துடன் பேசினார். திமுக என்பது தில்லுமுல்லு கட்சி என்று விமர்சித்த அவர் திமுக தங்களைப் பழிவாங்கு வதாகக் குறிப்பிட்டார். “கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை மருத்துவமனையில் சந்திக்க முத லில் அனுமதி கேட்டது விஜயகாந்த் தான். ஆனால், கடைசி வரை மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதி தரவில்லை. “இருப்பினும் ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வந்தபோது நாங்கள் அவரைத் தடுக்காமல் பெரிய மன துடன் வரவேற்றோம்,” என்று அவர் கூறினார்.