சென்னை: ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான பத்திரங் களையே பாதுகாக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுடன் நேற்று சென்னை யில் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பிறகு செய்தியாளர்களி டம் பேசினார். அப்போது அவர் மோடியைச் சாடினார்.
தேர்தலுக்குத் திமுக தயாராகி விட்டது என்று தெரிவித்த ஸ்டாலின், வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கவேண்டும் என்று வலியுறுத்திய திமுக தலை வர், அந்த இடைத்தேர்தலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருவதாகவும் இத் தகைய ஒரு செயல் ஜனநாயகத் திற்கு விரோதமானது என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணிக்கு ஆர். எம். வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி எனப் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பேராளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, தொண்டர் களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 20 தொகுதிகளில் திமுக போட்டி யிடுவதாக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். எஞ்சிய 20 தொகுதி களிலும் கூட்டணிக் கட்சிகள் நின் றாலும் அங்கு திமுகதான் நிற்கிறது என்ற எண்ணத்தில் தொண்டர்கள் செயல்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தேர்தல் மூலம் வரும் முடிவு மத்தியில் ஆளப்போவது யார் என் பதைத் தீர்மானிப்பதோடு மாநிலத் திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத் தும் என்றார் திமுக தலைவர்.

