பாலத்தில் கார் மோதி மூவர் பலி

கரூர்: கரூர் மாவட்டம் சீதப்பட்டிகாலனி என்ற இடத்தில் சாலையோரப் பாலத்தில் கார் மோதி ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். திருப்பதி சென்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது. மாண்டுவிட்ட சரஸ்வதி என்ற மாதின் கணவரான ராமகிருஷ்ணன் காயமடைந்துள்ளதாகவும் போலிஸ் புலன்விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.