10 இடங்களில் வெய்யில் சதம்

சென்னை: தமிழகத்தில் 10 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை, சேலத்தில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. 
தர்மபுரி,  திருச்சி,  திருத்தணியில் தலா 104 டிகிரியும் நாமக்கல்,  பாளையங்கோட்டை,  வேலூரில் தலா 103 டிகிரியும் கோயம்புத்தூரில் 101 டிகிரியும் பதிவானது.       12 மாவட்டங்களில் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.