கமல் கட்சியில் கோவை சரளா 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா நேற்று இணைந்தார். மக்கள் நீதி மய்யத்திற்குப் பெண்களின் ஆதரவு பெருகி வருவதாக அவர் கூறினார். மக்கள் நீதி மய்யத்தில் நடிகை ஸ்ரீப்ரியா, சினேகன் போன்ற திரைப்பட பிரபலங்கள் ஏற்கெனவே சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். படம்: தமிழக ஊடகம்