திருமணத்திற்குப் பயந்து கடலில் குதித்த பெண்: நான்கு பேர் விரட்டியதாக நாடகம் போட்டார்

சென்னை: பெற்றோரின் ஏற்பாட்டில் இடம்பெற இருந்த திருமணம் பிடிக்காமல், கடலில் குதித்துவிட்ட 26 வயது பெண், நால்வர் கும்பல் ஒன்றிடமிருந்து தப்பிக்க முயன்றதாக பொய் வாக்குமூலம் கொடுத் தார். கடைசியில் அவர் வீட்டிற்கே திரும்ப வேண்டியதாயிற்று. 
மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் பணியாற்றும் ஒருவர் சென்னையில் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். 
அவருக்கு 26 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்தப் பெண்ணுக்குப் பெற் றோர் நல்ல வரனாகப் பார்த்து திரு மணம் பேசினர். ஆனால் அந்தப் பெண், தனக்குத் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாகக் கூறி வந்தார். 

திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் விருப்பத்தை மீறி தனக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய் தால் எதைச் செய்தாவது திருமணத்தை நிறுத்திவிடப்போவதாகவும் அந்தப் பெண் தன் பெற்றோரிடம் திட்டவட்டமாகத் தெரி வித்து அவர்களை மிரட்டி வந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை நேரத்தில் அந்தப் பெண் தனியாக சென்னை மெரினா கடற்கரைக்குப் போனார். அப்போது இரவு சுமார் 7.30 மணி இருக்கும். திடீரென அவர் கடலை நோக்கி ஓடியதையும் அலையில் மாட்டிக் கொண்டு சிக்கியதையும் அங்கிருந்தவர் கள் பார்த்தனர். 
அலை சுருட்டி இழுக்கத் தொடங்கிய போது உதவிக்காக அந்தப் பெண் அலறி னார். அப்போது அங்கிருந்த சிலர் பெண்ணை  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலிஸ் விசாரணை நடத்தியது. 

கடற்கரைக்குத் தான் சென்றிருந்த தாகவும் அப்போது நான்கு பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய விரட்டிய தாகவும் அவர்களிடமிருந்து தப்பிக்க தான் கடலில் குதித்துவிட்டதாகவும் அந்தப் பெண் நாடகமாடினார். 
இதனிடையே, பெண்ணின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அந்தப் பெண்ணின் தந்தை உண் மையான காரணத்தை போலிஸ் அதிகாரி களிடம் எடுத்துக் கூறினார். புகார் எது வும் பதியப்படவில்லை. பெற்றோருடன் மகள் வீடு திரும்பினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு