வாரிசுகளுக்கு வாய்ப்பு தர திமுக, அதிமுகவில் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு கூடிவரும் வேளையில், முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவிலும் அதிமுகவிலும் வாரிசுகளுக்கு இடம் தரக்கூடாது என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. 
தலைவர்களின் வாரிசுகளுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக கட்சிக் காக பாடுபட்டவர்களுக்கு இடம் தரப்படவேண்டும் என்று பலரும் கட்சித் தலைமைக்கு வேண்டு கோள் விடுத்து இருக்கிறார்கள். 
தேர்தலில் யார் யார் போட்டி யிடப்போகிறார்கள் என்பது பற்றிய விவரங்களை இந்தக் கட்சிகள் இன்னும் சில நாட்களில் வெளியிட இருக்கின்றன. 
திமுக, அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
திமுக பொருளாளர் துரைமுரு கனின் மகன், விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் பொன்முடியின் புதல்வர், முன்னாள் அமைச்சர் வீராசாமியின் மகன் முதலானோர் திமுகவில் வாய்ப்பு கேட்டுள்ளனர். 
இது ஒருபுறம் இருக்க, கனி மொழி, டி.ஆர் பாலு, ஜெகத்ரட் சகன், தயாநிதி, ராஜா, பழனி மாணிக்கம் போன்ற பழைய முகங் களுக்கு வாய்ப்பு இருக்கும் என் பது உறுதியாகிவிட்டது. 
இந்நிலையில், இதர தொகுதி களையும் வாரிசுகளுக்கே வழங்கி விட்டால் கட்சிக்காகப் பாடுபட்ட வர்களுக்கு வாய்ப்பே  இருக்காது என்று தொண்டர்கள் மனம் குமுறு கிறார்கள். 
இதே நிலை அதிமுகவிலும் நிலவுவதாகத் தெரிகிறது. அமைச் சர் ஜெயக்குமாரின் மகன், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் புதல்வர், அமைச்சர் சிவி சண் முகத்தின் சகோதரர், மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன், கடலூர் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் மகன், கரூர் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை, முன் னாள் அமைச்சர் விஸ்வநாதனின் மைத்துனரான கண்ணன் ஆகி யோர் தங்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 
முதல்வர் பழனிசாமியின் புதல் வரும் அமைச்சர் வேலுமணியின் சகோதரரும் தங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
வாரிசு அரசியலை எதிர்த்து குரல்கொடுத்து வந்துள்ள அதிமுகவில் இத்தகைய போக்கு தலைதூக்கி இருப்பதைக் கண்டு அந்தக் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. 
தொண்டர்களின் விருப்பத்தை எல்லாம் மீறி தலைவர்கள் முடிவு எடுத்தால் அத்தகைய வேட்பாளர் களுக்கு ஆதரவாக தொண்டர்கள் களப்பணிகளைச் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்

17 Jul 2019

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி