எடப்பாடி பழனிசாமி: அதிமுக கூட்டணியை உடைக்க சதி

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல் வரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலை மையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
“அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டு போயுள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. ஆனால் பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.