டி.டி.வி. தினகரன் கட்சி ஆலோசனை

சென்னை: டி.டி.வி. தினகரனின் அமமுக, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளை இணைப்பது, 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலைச் சந்திக்க வியூகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.