திமுக வருமானம் 800% உயர்வு

சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு தவணைக் காலங்களில் திமுக ஆட்சியில் இல்லை. இருந்த போதிலும் அதன் செல்வாக்கு குறையவில்லை.
ஆண்டு தணிக்கை அடிப் படையில் 2017-2018 நிதி ஆண்டில் அதன் வருமானம் 800 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வட்டாரக் கட்சிகளில் ஒன்றான திமுக 35.74 கோடி ரூபாய் வரு வாயுடன் தமிழகத்தில் முதல் கட்சியாக வருமானப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
இந்திய அளவில் சமாஜ்வாடி கட்சிக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் திமுக உள்ளது. இந் தியாவில் உள்ள வட்டாரக் கட்சி களில் சமாஜ்வாடி கட்சி 47.19 கோடி ரூபாயுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
திமுகவின் வருவாய் 2016-2017ல் 3.78 கோடி ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகை யில் தற்போதைய திமுகவின் வரு வாய் 800% உயர்வாகும்.
திமுக கட்சி தாக்கல் செய் துள்ள கணக்குகளில் வருவாய், 35.74 கோடி ரூபாய் என்றும் செலவு 27 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கட்டணம் மற்றும் சந்தா வகையில் 22 கோடி ரூபாயும் வட்டி வருவாயாக 11 கோடி ரூபாயும் நன்கொடை வாயிலாக 2 கோடி ரூபாயும் கிடைத்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதே சமயத்தில் 2017-18ல் ஆளும் அதிமுகவின் வருவாய் 12 கோடி ரூபாய் மட்டுமே என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அக்கட்சிக்கு வட்டி மூலம் 11 கோடியும் கட்டணம் மற்றும் சந்தா வகையில் ஒரு கோடி ரூபாயும் வருமானமாகக் கிடைத்துள்ளது.
இதில் அக்கட்சிக்கு ஏற்பட்ட செலவு 10 கோடி ரூபாய். இதற்கு முன்பு 2016-17ல் அதிமுகவின் வருவாய் 48 கோடி ரூபாயாகும்.
மேலும் தமிழகத்தின் இதர வட்டாரக் கட்சிகளான பாமக 1.17 கோடி ரூபாயையும் தேமுதிக 87 லட்சம் ரூபாயையும் சம்பாதித்துள் ளன. பாஜக, காங்கிரஸ் கட்சி போன்ற தேசிய கட்சி நீங்கலாக வட்டாரக் கட்சிகளின் நிலை இது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்

17 Jul 2019

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி